'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். இது ரஹ்மான் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
கோல்கட்டாவை சேர்ந்த கிடார் கலைஞரான மோகினி டே-வும் ஏஆர் ரஹ்மானும் ஒரே நாளில் விவாகரத்து அறிவித்திருப்பதால் பலரும் சந்தேக நோக்கில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தனர். இருவரும் திருமணம் செய்துக்கொள்வதற்காக தங்களது துணையை பிரிந்துள்ளதாக செய்தி வெளியிட்டனர். இந்த நிலையில் சாய்ரா பானு தரப்பு வழக்கறிஞர் வந்தனா ஷா அளித்துள்ள விளக்கம்: இதற்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரஹ்மான் மற்றும் சாய்ரா, தங்களது விவாகரத்து முடிவை சுயமாக எடுத்தனர். ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. அது லேசானது அல்ல. இது பரஸ்பர விவாகரத்து ஆகும். அதனால் நிதி பகிர்வு குறித்த எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.