காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மதுரை பகுதியில் இப்போதும் தெருக்கூத்தாக, வில்லுப்பாட்டாக சொல்லப்படும் நாட்டுப்புற கதைதான் 'மதுரை வீரன்'. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு இளைஞன் தன் வீரத்தால் பாண்டிய நாட்டு இளவரசியை காதலித்து அந்த நாட்டின் தளபதியாகி பின்பு அரச குடும்பத்தால் மாறுகால் மாறுகை பலிவாங்கப்பட்டு மறைந்த இளைஞன். இன்னும் பல குடும்பங்களுக்கு மதுரை வீரன் குலசாமி. கிராமங்களில் மதுரை வீரனுக்கு கோவிலும், சிலைகளும் உள்ளது.
இந்த கதையில்தான் 1956ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. கடைசி காட்சியில் எம்.ஜி.ஆர் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு கிடக்கும் காட்சியை காண முடியாமல் பெண்கள் கதறி அழுத வண்ணம் வெளியே வந்ததும், பல தியேட்டர்களில் அந்த காட்சிகள் காட்டப்படாததும் வரலாறு.
ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரனுக்கு முன்பே இந்த கதை 1939ம் ஆண்டே வெளிவந்துள்ளது. இதில் மதுரை வீரனாக வி.ஏ.செல்லப்பா நடித்தார். அவரது காதலியாக டி.பி.ராஜலட்சுமி நடித்தார். எம்.எம்.சிதம்பர நாதன், பி.ஆர்.மங்களம் உள்ளிட்ட பலர் நடித்தார்கள், ராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. படத்தின் பாடல்களை டி.பி.ராஜலட்சுமியே எழுதி செல்லப்பாவுடன் இணைந்து பாடி இருந்தார்.
இந்த படத்தின் பிரதிகள் இப்போது இல்லை. மதுரை பகுதியில் மதுரை வீரன் என்ற பெயரில் பல நாட்டுப்புற கதைகள் உள்ளது. வி.ஏ.செல்லப்பா நடித்த மதுரை வீரன் கதை வேறு, எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் கதை வேறு என்று கருத்தும் உள்ளது.




