ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
சூர்யா நடித்த 'கங்குவா' படம் நேற்று முன்தினம் வெளியானது. கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு பான் இந்தியா படமாக ஓடி வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44வது படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆர்ஜே பாலாஜி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். ஸ்கிரிப்ட் புத்தகத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “நடந்து கொண்டிருக்கிறது… நாங்கள் நம்புகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' குறித்த விமர்சனங்கள் வெளிவந்த ஒரு நாளில் ஆர்ஜே பாலாஜி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 'கங்குவா' போன்ற விமர்சனங்கள் பெரும் அளவில் எழாதபடி சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு பயம் அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.