அன்று 'மொத்த வித்தை', இன்று '2000 கோடி' - சூர்யாவுக்கான சறுக்கல்கள் | வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் சேஞ்சர்'ஐத் தொடர்ந்து 'புஷ்பா 2' | 'கங்குவா' இரைச்சல் சத்தம், ரசூல் பூக்குட்டி 'கமெண்ட்' | கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி பெயர் இரண்டாவது இடத்தில்… | வளர்ப்பு மகள் மீது 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து நடிகை | புதுப்படத்தில் கமிட்டான ரோஷினி ஹரிப்பிரியன்! | பத்து வருடங்களுக்கு முன்பே அமரனுடன் நட்பு பாராட்டிய பிரித்விராஜ் | குழந்தைகள் தினம் கொண்டாடிய மம்முட்டி | துல்கர் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்கா சித்தார்த்தின் மிஸ் யூ? | ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி |
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும், ஆரம்பக் கட்டத்தில் தட்டுத் தடுமாறி சில பல தோல்விகளுக்குப் பின் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்தவர் சூர்யா. “நந்தா, காக்க காக்க, பிதாமகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று, ஜெய் பீம்” ஆகிய படங்கள் அவரது கதாபாத்திரங்கள் பற்றியும், அதில் அவரது நடிப்பைப் பற்றியும் அதிக பாராட்டைப் பெற வைத்த படங்கள்.
அவற்றிற்கிடையில் அவர் நடித்த சில படங்கள் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஏமாற்றத்தைத் தந்த படங்களாகவும் அமைந்தன. சூர்யா நடித்து கடைசியாக 2022ல் 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளிவந்தது. கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'கங்குவா' படம் நேற்று வெளிவந்தது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் முதல் காட்சி முடிந்த பிறகே ரசிகர்களின் ஏமாற்றத்தை அதிகமாக வெளிப்படுத்திய படமாகவும் அமைந்தது.
இந்தப் படம் குறித்து பலரும் தெரிவித்த கருத்தாக 'ஓவர் பில்டப்' என்பதுதான் பேசப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து 2014ல் வெளிவந்த 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு 2024ல் வெளிவந்துள்ள இந்த 'கங்குவா' படம் அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு படங்களுக்குமே அந்த 'ஓவர் பில்டப்' தான் பாதிப்பை ஏற்படுத்தியது என திரையுலகில் உள்ளவர்களும் பேசுகிறார்கள்.
'அஞ்சான்' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு பேட்டியில் படத்தின் இயக்குனர் லிங்குசாமி, 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கி வச்சிருக்கேன்,' என ஓவராகப் பேசினார். படம் வந்த பின் 'இதுதான் உங்களது மொத்த வித்தையா' என ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். படம் படுதோல்வியை சந்தித்தது.
இப்போது, 'கங்குவா' படத்திற்கு வருவோம். படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 'இந்தப் படம் 2000 கோடி வசூலிக்கும். ஜிஎஸ்டியுடன் கணக்கு காட்டுகிறேன், டிசம்பர் மாதம் பிரம்மாண்ட வெற்றி விழாவை நடத்துவேன்,' என பேசிய சில பேச்சுக்கள் படத்திற்கான விமர்சனங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துவிட்டது. அதே 'அஞ்சான் ஓவர் பில்டப்', இந்த 'கங்குவா' விலும் எதிரொலித்துவிட்டது.
சூர்யா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தன்னை வைத்து படங்களைத் தயாரிப்பவர்களையும், இயக்குனர்களையும் அதிகமாகப் பேசக் கூடாது, ஓவர் பில்டப் செய்யக் கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டால் கூட தப்பில்லை என்கிறார்கள் கோலிவுட்டில். 'அஞ்சான், கங்குவா' என இரண்டு படங்கள் தந்த பாடத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அக்கறை உள்ளவர்கள்.