ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை 'புஷ்பா 1, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களின் வரவேற்பும், வசூலும் நிரூபித்தது.
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்', 2025 ஜனவரி 10ம் தேதியும், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டிசம்பர் மாதம் 5ம் தேதியும் வெளியாக உள்ளன.
'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. படத்தில் நடித்துள்ள ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, தயாரிப்பாளர் தில் ராஜு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் வட இந்தியாவில் நடத்த உள்ளனர். பீஹார் மாநிலம் பாட்னா நகரில் நவம்பர் 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வட இந்திய மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது ஹிந்தி ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்கிறது என்பதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள். அது படம் வெளியான பின்பு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.