புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் 'அமரன்'. அப்படம் முதல் நாளில் 42 கோடி வசூலையும், 10வது நாளில் 200 கோடி வசூலையும் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த வார இறுதி விடுமுறை நாளில் இப்படத்திற்கு மீண்டும் வசூல் அதிகரித்தது. தீபாவளி விடுமுறை நாட்களில் பெற்ற வசூல் போல மீண்டும் கிடைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தற்போது 13 நாட்களிலேயே இப்படம் 250 கோடி வசூலைக் கடந்துளளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடம் வெளியான படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் தற்போது 'அமரன்' படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 450 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களின் வசூல் 'அமரன்' படத்தை அடுத்து 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.