அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக அதிகாலை காட்சிக்குக் கோரிக்கை வைத்து தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தது. “கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 14ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் ஆரம்பமாகின்றன. தமிழகத்திலும் அதிகாலை காட்சிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அது குறித்து அப்டேட் கொடுக்கிறோம்,” தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் படம் வெளியாகும் நவம்பர் 14ம் தேதி மட்டும் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது அன்றைய தினம் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்து மொத்தம் 5 காட்சிகளை திரையிட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகளையும் திரையிட்டு முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.