'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் |
சிவகுமார் நடித்த படங்கள் அனைத்திலும் அவர் மென்மையான கேரக்டர்களிலேயே நடித்தார். புவனா ஒரு கேள்வி குறி, ராம் பரசுராம் மாதிரியான சில படங்களில்தான் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இன்றைக்கு வருகிற பெரும்பாலான படங்களில் ஹீரோ தாதாவாகத்தான் இருக்கிறார்கள். அப்படி சிவகுமார் தாதாவாக நடித்த படம்தான் 'வண்டிச் சக்கரம்'.
மைசூர் மார்க்கெட்டையே ஆட்டிப்படைத்த ஒரு தமிழ் தாதாவின் கதை. காதலுக்காக தன் தாதாயிசத்தை விட்டுவிட்டு சாப்டாக மாறும்போது சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் திரைக்கதை. இதில் சிவகுமார் ஜோடியாக சரிதா நடித்திருப்பார், வினு சக்ரவர்த்தி வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில்தான் சில்க் ஸ்மிதா அறிமுகமானார். கே.விஜயன் இயக்கிய இந்தப் படம் சிவகுமாரின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அப்போதெல்லாம் படங்களின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரமாக இருந்தபோது 2 மணி நேர படமாக வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு சிவகுமாரின் சாக்லேட் பாய் இமேஜ் மாறி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார்.