மூக்குத்தி அம்மன்-2 படத்தில் இரண்டு வேடங்களில் நயன்தாரா! | கிரவுட் பண்டிங்கில் உருவான 'மனிதர்கள்' | மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட் | பிளாஷ்பேக்: வாகை சந்திரசேகரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா | பிளாஷ்பேக் : மனோரமாவை ஹீரோயினாக்கிவிட்டு மறைந்த டி.ஆர்.சுந்தரம் | தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் ரெய்டு: இவர் யார் தெரியுமா...? | தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? |
முன்னணி மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தற்போது தனது ரீ எண்ட்ரியில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மோகன்லாலுடன் 'ஓடியன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் மஞ்சு வாரியர் கோர்ட்டில் ஆஜராகி தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீகுமார், மஞ்சு வாரியர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வார் என்று தெரிகிறது.