ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் 'கங்குவா' படம் பான் இந்தியா படமாக அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 2 டி, 3 டி முறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டப்பிங் மற்ற மொழிகளில் ஏஐ தொழில்நுட்பம் மூலமும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 10000 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜி தனஞ்செயன் இத்தகவலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் 700 தியேட்டர்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்களுக்கு அதிகமாகவும், வட இந்தியாவில் 3000 முதல் 3500 தியேட்டர்கள் வரையிலும் ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைத்தையும் சேர்த்தால் 10000 தியேட்டர்கள் வரை வரும்,” எனக் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படம் 10000 தியேட்டர்களில் வெளியானது. அதற்கடுத்து, பதான் - 8000 தியேட்டர்கள், கேஜிஎப் 2 - 7000, 2.0 - 6900, பாகுபலி 2 - 6500, ஆர்ஆர்ஆர் - 6000, பிரம்மாஸ்திரா - 5000 தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.