மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் |
2023ம் ஆண்டு பொங்கல் படங்களின் வெளியீட்டின் போது 'துணிவு' படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது லாரி மீதிருந்து தவறி விழுந்து ஒரு இளைஞர் இறந்து போனார். அதன் பிறகு எந்த ஒரு படத்திற்கும் தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவந்த போது கூட முதல் காட்சியாக காலை 9 மணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
அதே சமயம் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகாலை காட்சி, 6 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவை வழக்கம் போல நடைபெற்று வருகின்றன. அந்தக் காட்சிகளில் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் ரசிகர்கள் தமிழக எல்லை அருகே அமைந்துள்ள மற்ற மாநில ஊர்களில் உள்ள தியேட்டர்களில் சென்று படங்களைப் பார்க்கிறார்கள்.
இந்த மாதம் நவம்பர் 14ம் தேதி பான் இந்தியா படமாக 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக அதிகாலை காட்சிக்குக் கோரிக்கை வைத்து தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
“கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 14ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் ஆரம்பாமகின்றன. தமிழகத்திலும் அதிகாலை காட்சிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அது குறித்து அப்டேட் கொடுக்கிறோம்,” தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த ஒரு படத்திற்காக தமிழக அரசு எப்படி சிறப்பு சலுகை கொடுக்கும் என்ற கேள்வியும் திரையலகத்தில் எழுந்துள்ளது. அப்படி கொடுத்தால் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
'துணிவு' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடித்து எந்த ஒரு படமும் வரவில்லை. அந்தப் படத்தின் அதிகாலை காட்சிக்காக ஏற்பட்ட ஒரு விபத்தால் நடந்த அகால மரணமே இந்த அதிகாலை காட்சிகளின் மறுப்புக்குக் காரணம் என்பதை இங்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் எல்லை மீறி நடப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு அப்படியான அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.