ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் போடும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு அவற்றை சாக்கடை ஆக மாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு தாங்களும் சிறிதும் குறையில்லை என ரஜினி, கமல் ஆகியோரது மூத்த வயதுடைய ரசிகர்களும் செய்து வருகிறார்கள்.
இதில் அஜித் ரசிகர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் எரிச்சலைத் தருவதாக அமைந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு 2021ல் இந்தியப் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட 'வலிமை அப்டேட் வேண்டும்' என கூச்சலிட்டனர் அவரது ரசிகர்கள். அதே வருடம் சென்னையில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்த போதும் 'வலிமை அப்டேட்' என கூச்சல் போட்டனர். அதற்கடுத்து அஜித் நடித்த படங்களின் போதும் அடிக்கடி 'அப்டேட் அப்டேட்' எனக் கேட்டு எரிச்சலூட்டினர்.
கடந்த சில வாரங்களாக பல பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' எனக் கூக்குரலிட்டு அடுத்த கட்ட எரிச்சலை ஆரம்பித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த 'அமரன்' படத்திலும் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் 'கடவுளே அஜித்தே' எனக் கத்துவதாக செய்திகள் வந்துள்ளன. இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகப் பதவி வகித்து, தீவிரவாதிகளைக் கொன்று வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறுதான் 'அமரன்' படம்.
அப்படிப்பட்ட ஒருவரது தேசப்பற்றையும், வீரத்தையும் பெருமைப்படுத்தி வந்துள்ள படம் தியேட்டர்களில் ஆரம்பமாகும் போது 'கடவுளே அஜித்தே' எனக் கத்துவதாகவும், கிளைமாக்ஸ் காட்சியில் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் வீர மரணம் அடையும் காட்சியிலும் கூட 'கடவுளே அஜித்தே' எனக் கத்தி படம் பார்ப்பவர்களை கோபப்பட வைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
ஒரு தேசப்பற்று படத்தில் கூடவா இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமாகக் கூச்சலிடுவது என பலரும் புலம்புகிறார்கள். இது குறித்து அஜித் உடனடியாக அவரது ரசிகர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் அவரது பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.