ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? |
தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களில் ஒருவர் விஜய். அவரது கடைசி சில படங்கள் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தவை. 'லியோ' படம் 600 கோடி வசூலித்தது என்றும், கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 'தி கோட்' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்பதும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அவருடைய கடைசி 3 படங்களின் பட்ஜெட் மட்டுமே 300 கோடியை நெருங்கி வந்தவை என்கிறார்கள். 'தி கோட்' படத்தின் பட்ஜெட்டே 400 கோடி என்ற ஒரு தகவல் கோலிவுட்டில் உலா வந்தது. அப்படியென்றால் அவரது கடைசி படமாக உருவாகி வரும் 69வது படத்தை எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக எடுக்க வேண்டும். அவருடைய கடைசி படம் என்பதற்காகவே அந்தப் படத்தை அனைத்து விஜய் ரசிகர்களும் கண்டிப்பாகப் பார்த்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் வந்து பார்த்தாலே 600 கோடியைக் கண்டிப்பாகக் கடந்துவிடும். அப்படியென்றால் படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடியாவது இருக்க வேண்டாமா ?.
இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான 69வது படத்தின் பட்ஜெட் சிறியது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க அணுகி இருக்கிறார்கள். அவர் தற்போது வாங்கி வரும் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அது பெரிய தொகை, தங்களால் தர முடியாது, இது சிறிய பட்ஜெட் படம் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால், சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.
'தி கோட்' படத்தை விடவும் குறைந்த பட்ஜெட்டிலா இப்படத்தை எடுக்கிறார்கள் என கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள். விஜய் 69வது படத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தனது கடைசி படத்தை தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குத் தராமல் வேற்று மொழி தயாரிப்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தது இங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது படத்தின் பட்ஜெட் விவகாரம் வெளியில் கசிந்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.