பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் | ஹேக் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாட்ஸ்அப் கணக்கு |
மேஜர் முகுந்த் வரதரராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். இந்த படத்தை ரஜினி பார்த்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மேலும் அவர் படத்தை பாராட்டிய ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில் போட்டோ, வீடியோவை பகிர்ந்து, ‛‛ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன்,ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்'' என குறிப்பிட்டுள்ளனர்.