புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. இந்த வருட தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சில படங்கள் வெளிவந்தன.
தமிழில் வெளிவந்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் தனது முதல் நாள் வசூலில் மற்ற தீபாவளி ஹிந்தித் திரைப்படங்களை விடவும் அதிக வசூலைக் குவித்துள்ளது. அதன் முதல் நாள் வசூல் 42 கோடி.
இருந்தாலும் ஹிந்தியில் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'சிங்கம் அகய்ன், பூல் புலையா' ஆகிய இரண்டு படங்களும் தலா 30 கோடி வசூலித்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு தமிழ், மலையாளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்கிறார்கள். இப்படத்திற்கு தற்போது கூடுதல் தியேட்டர்கள் கிடைத்து வருகிறதாம்.
மேலே குறிப்பிட்ட படங்கள் எப்படியும் லாபத்தைத் தந்துவிடும் என்று நம்புகிறார்கள். மற்ற தீபாவளிப் படங்களில் ஓரிரு படங்கள் மட்டும் சுமாரான வசூலைப் பெற்று நஷ்டத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுதான் இந்திய அளவில் வெளியான தீபாவளிப் படங்களின் இன்றைய நிலவரம்.