அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான அமெரிக்க முன்பதிவு விறுவிறுப்பாக ஆரம்பமாகியுள்ளது. தற்பேதைக்கு 554 காட்சிகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. தெலுங்கில் 300 காட்சிகளுக்கு அதிகமாகவும், ஹிந்தியில் 200 காட்சிகளுக்கு அதிகமாகும் தற்போது நடந்து வருகிறது. வரும் திங்கள் கிழமை முதல் ஐமேக்ஸ், பிஎல்எப் உள்ளிட்ட திரைகளுக்கும் சேர்த்து முழுமையான முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கில் வெளியான 'கல்கி 2898 ஏடி, தேவரா' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றன. அவற்றை விடவும் 'புஷ்பா 2' புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.