ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் பாலிவுட் நடிகைகளான த்ரிப்தி டிகிரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால், இவர்கள் பெரும் தொகை சம்பளமாக கேட்பதால் தற்போது இந்த முயற்சியிலிருந்து வெளியேறினர் படக்குழு.
இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இன்னும் இந்த ஒரு பாடல் காட்சி ஒன்றும் மட்டும் தான் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.