செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கலைஞர் டி.வி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வருகிற திங்கள் முதல் (4ம்தேதி) 'பவித்ரா' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் சிறப்பு எபிசோட்டுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்து நடிக்கும் முதல் தொடர். அவரது ஜோடியாக பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார். பிரபல தொழிலதிபர் ரமா தேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணா, சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணம் முடித்து கொடுக்க ரமா தேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை, பவானி திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு குடும்பத்திலும், காதலிலும் என்ன நடக்கிறது. ஜோதியின் நிலை என்ன என்பது தான் தொடரின் கதை.