ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்துள்ள படம் 'அமரன்'. வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 42.3 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழகத்தை கடந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் வசூலில் சிவகார்த்திகேயன் கேரியரில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.




