விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் வசப்பட்டனர். சில வருடங்கள் தங்களது காதலை வலுவாக்கிக் கொண்டு, கடந்த 2022 ஜூன் மாதம் திருமணத்தில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு குழந்தைகளுடனுமான தங்களது சந்தோஷ நிகழ்வுகளை அவ்வப்போது தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிடத் தவறுவதில்லை.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டான் கோல்ட் சென்னை ரிசார்ட்டுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விசிட் அடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் கூறும்போது, “எங்களது திருமணம் நடைபெற்ற அதே இடத்திற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறோம். மீண்டும் அதேபோல இங்கே கிடைக்கப் போகும் மறக்க முடியாத தருணங்களுக்காக எங்களால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.