ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்களே உள்ளன. தீபாவளி என்றாலே புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள், இதர பலகாரங்கள் என கொண்டாட்டமாக இருக்கும். அவற்றோடு புதிய படங்களைப் பார்ப்பதும் கொண்டாட்டம்தான். ஆனால், இந்த வருட தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோரது படங்கள்தான் வருகிறது.
ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வந்தால்தான் தீபாவளி களை கட்டும் என நினைக்கும் அவர்களது ரசிகர்கள் இந்த வருடம் ஏமாந்து போய் உள்ளார்கள். ரஜினி நடித்த 'வேட்டையன்' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. கமல் நடித்து வரும் 'தக் லைப்' படம் அடுத்த வருடம்தான் வெளியாகப் போகிறது.
விஜய் நடித்த 'தி கோட்' படம் கடந்த மாதம்தான் வெளியானது. அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி' படம் எப்போது வரும் என்பது குறித்த அப்டேட் எதுவும் இல்லை. அடுத்த வருடப் பொங்கலுக்கு இந்த இரண்டில் எது வரும் என்பதன் குழப்பம் நீடித்து வருகிறது. சூர்யாவுக்கு அடுத்த மாதம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. ஆனாலும், அதன் புரமோஷனை கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாகவே ஆரம்பித்துவிட்டார்கள். சில தீபாவளி வெளியீட்டுப் படங்களுக்குக் கூட அவ்வளவு புரமோஷன் இல்லை.
சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படம். அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். கொண்டாட்ட மனநிலையுடன் படத்தைப் பார்க்காமல் தேசப்பற்று மனநிலையுடன்தான் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க முடியும். 'ப்ளடி பெக்கர்' படத்தில் பிச்சைக்காரனாக எவ்வளவு நேரம் நடித்திருப்பார், எப்படி ரசிக்க வைப்பார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறது. 'பிரதர்' படம் காமெடியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தீபாவளி கொண்டாட்ட மனநிலையில் ரசிகர்கள் எந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் இப்போதைக்கு 'அமரன்' படம் முன்னணியில் உள்ளது. தீபாவளியை, ராணுவ அதிகாரியின் தியாகத்துடன் தேசப்பற்றாகக் கொண்டாடவே ரசிகர்களும் தயாராகி உள்ளார்கள் என்பது தெரிகிறது. மற்ற இரண்டு படங்கள் என்டர்டெயின்மென்ட்டாக இருந்தாலும் 'அமரன்' இன்போடெயின்மென்ட்டாகவும் இருக்கப் போகிறது.