குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என அவரது கடந்த சில படங்களின் தயாரிப்பின் போது பேசப்பட்டது. விஜய்யின் கடைசி படமாக தயாராக உள்ள அவரது 69வது படத்திற்காக பெறப்போகும் சம்பளம் 275 கோடி என யாரோ சிலர் கிளப்பிவிட்டார்கள். அது உண்மையா பொய்யா என்பது கடைசி வரையில் வெளிவராது. அவ்வளவு சம்பளம் அவர் வாங்குகிறார் என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் பெற முடியும். இதற்கு முன்பு ஷாரூக்கான்தான் 250 கோடி ரூபாய் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
தற்போது விஜய்யின் 275 கோடி சம்பளத்தை தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முறியடித்துவிட்டார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. 'புஷ்பா 2' படத்திற்காக அவரது சம்பளம் 300 கோடி என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக அவர் கடந்த மூன்று வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் வருடத்திற்கு ஒரு படம் என்றால் கூட 300 கோடியை சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், 'புஷ்பா 2' படத்திற்காக அவர் மொத்த வசூலில் 30 சதவீதம் வரை பங்கு கேட்டுள்ளார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. உதாரணத்திற்கு 1000 கோடி வசூலிக்கிறது என்றால் அவரது சம்பளம் 300 கோடி என்று கேட்பாராம். அவரைப் போலவே படத்தின் இயக்குனரும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கேட்டுள்ளதாகத் தகவல்.
'புஷ்பா 2' வியாபாரம் 1000 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. அதனால், 2000 கோடி வரை வசூலை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். வசூல் அதிகமாக அதிகமாக அல்லு அர்ஜுனின் சம்பளமும் அதிகமாகும். அது எத்தனை கோடிக்குப் போய் நிற்கும் என்பது வசூல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.