லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா | நடிகர் மோகன் பாபு தலைமறைவா...? | அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின், இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கு திரையுலகம் | ரஜினியின் நன்றிக் கடிதம் : கமல்ஹாசன் ரசிகர்கள் கோபம் | திருஷ்டி சுற்றி அல்லு அர்ஜுனை வரவேற்ற குடும்பத்தினர் |
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படம் வர இருக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அவரது படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தனது உடல்நிலை காரணமாக தான் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் மலையாளத்தில் நடைபெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துல்கர் சல்மான், தான் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி நடிப்பதால் மலையாளத்தில் ஏதோ இடைவெளி விழுந்து விட்டது போல தோன்றலாம். ஆனால் ரசிகர்கள் என்னிடம் அதே அன்புடன் தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலித்த ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். அது மட்டுமல்ல இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதையும் வென்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழுந்த தனது நண்பனை போராடி மீட்கும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக, நடித்திருந்த நடிகர் சவ்பின் சாஹிர் டைரக்சனிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சவ்பின் சாஹிர் இயக்குனர் அன்வர் ரஷீத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். பின்னர் வாய்ப்பு தேடி வந்ததால் காமெடி நடிகராக மாறியவர். குறிப்பாக நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து அவரது நண்பராக பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல துல்கர் சல்மான் நடித்த பறவ என்கிற படத்தை இயக்கியதன் மூலமே இயக்குனராகவும் மாறினார். அந்த நட்பின் அடிப்படையில் மீண்டும் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்க இருக்கிறார் சவ்பின் சாஹிர்.