அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் |
பிலாமெண்ட் பிக்சர்ஸ், சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'பிளடி பெக்கர்'. இதில் கவினுடன் மாருதி பிரகாஷ்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, பிருத்விராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.
தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி மற்றும் தனுஷையே சிபாரிசு செய்துள்ளார். ஆனால் இயக்குனர்தான் பிடிவாதமாக கவினை நடிக்க வைத்தார்.
இதுகுறித்து நெல்சன் கூறியிருப்பதாவது: 'வேட்டை மன்னன்' படத்தின்போது என்னிடம் சிவபாலன் உதவி இயக்குனராக சேர்ந்தார். 'ஜெயிலர்' படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். 'ஜெயிலர்' பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், 'ஜெயிலர்' வெற்றி பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், 'ஜெயிலர்' படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் 'பிளடி பெக்கர்' தயாரிப்பது உறுதியானது.
கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர்களை சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.
படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. திரில்லர் படமான இதில் டார்க் காமெடி, என்டர்டெயின்மென்ட் என எல்லாமே இருக்கும்” என்றார்.