தமிழில் ‛பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார்- 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு தான் காலை 6 .34 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி விட்டதாக புகைப்படத்துடன் ஒரு தகவலையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படி அதிகாலையே படப்பிடிப்பு தளத்தில் தான் ஆஜரான செய்தியை அவர் வெளியிட்டதை பார்த்து, உங்களுக்கு அவ்ளோ தொழில் பக்தியான்னு சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.