லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்க, முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. அங்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் நடித்த ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் திட்டமிட்டு இருந்த வினோத், 9 நாட்களிலேயே அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதாவது காவல் துறையிலிருந்து ஒரு பிரச்னையால் வெளியேறும் விஜய், ஒரு முக்கிய கேஸ் சம்பந்தமாக மீண்டும் போலீஸ் பணியில் சேர்ந்து அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. அந்த குற்றவாளி யார்? எப்படிப்பட்ட குற்றம் செய்தவர் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்குமாம். அதன் காரணமாகவே இந்த சஸ்பென்ஸ் உடைந்திராத வகையில் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளாராம் எச்.வினோத்.