ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மலையாள திரையுலகில் நல்ல கதை அம்சங்கள் மட்டுமே கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட் செலவில் வெளியாகி வந்த நிலையில் சமீப வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு சவால் விடும் அளவிற்கு பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்க துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பீரியட் படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் மூன்று வித காலகட்டங்களில் நிகழும் ஒரு பீரியட் படமாக வெளியானது. அடுத்ததாக மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக இயக்கியுள்ள பரோஸ் திரைப்படமும் வாஸ்கோடகாமா காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது, விரைவில் வெளியாகவும் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யாவின் திரை உலக பயணத்தில் அவர் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் படமாக கத்தனார் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயசூர்யா தவிர பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜின் தாமஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் வரலாற்று பின்னணியில் தான் உருவாகிறது.
அதுமட்டுமல்ல மலையாள திரையுலகிலேயே முதன்முறையாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் படமும் இதுதான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 18 மாதங்களாக 6 கட்ட படப்பிடிப்புகளாக 212 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்கிற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.