தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி பாடகியரில் ஒருவராக இருந்தவர் சுசித்ரா. சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள், நடிகையரைப் பற்றிய அவரது பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன்பிறகு அமைதியாக இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தான் சென்னையைவிட்டு மும்பை சென்று செட்டிலாகிறேன் என்றும் நேற்று தெரிவித்திருந்தார். அடுத்து மற்றுமொரு பதிவையும் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கான கடிதம் என தலைப்பிட்டு அதில், “போலி கணவனாக இருந்து, குழந்தைகளைப் பெறவிடாமல் தடுத்ததன் மூலம் என் வாழ்நாளின் 13 ஆண்டுகளை அழித்துவிட்டாய். சென்னையில் நான் கடுமையாக உழைத்த இடத்திலிருந்து உனது வைரல் வீடியோக்களால் என்னை தூக்கி எறிந்துவிட்டீர்கள்.
நான் உன்னை மணந்தபோது நீ திறமையற்ற, நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்தாய். உனது ஒரே சீயர்லீடர் உனது அம்மாதான். உனது நடிப்பு அபத்தமானது என்பதை மற்றவர்கள் சொல்ல முயன்றனர். நீங்கள் ஒரு முக்கிய அங்கமாக இருந்த ஒவ்வொரு படத்தையும் அழித்துவிட்டீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழகத்திற்கோ அல்லது சென்னைக்கோ திரும்ப வருவதில்லை என்ற எனது முடிவுப் பற்றி நான் வருத்தப்படுகிறேன். அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். கார்த்திக்குமாரின் ஆதரவாளர்களே, தயவு செய்து இதை அவருடன் பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பற்றி அவதூறு செய்ய அவரை ஊக்குவியுங்கள். அதனால், இதற்கு கமெண்ட்கள் தேவையில்லை,” என அப்பதிவின் கமெண்ட் பகுதியையும் பிளாக் செய்துள்ளார்.