சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் 'டகோய்ட் ; தி லவ் ஸ்டோரி' என்கிற தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆத்விசேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை சனைல் தியோ என்பவர் இயக்கி வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதோடு இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்த படம் துவங்கியபோது படத்தின் ஹீரோ ஆத்விசேஷுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு இனிமையான ஷூட்டிங் அனுபவம் என்று தான் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பில் இயக்குனர் என்று ஒருவர் இருந்தாலும் அங்கே நாளுக்கு நாள் நாயகன் ஆத்விசேஷின் ஆதிக்கம் தான் அதிகப்படியாக இருந்தது என்றும் தான் நடிக்க கூடிய காட்சிகளில் கூட அவர் குறுக்கீடு செய்தார் என்றும் அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் கதையையும் திரைக்கதையையும் இயக்குனர் ஷனைல் தியோ உடன் இணைந்து எழுதியுள்ளார் ஆத்விசேஷ். அதனால் படப்பிடிப்பிலும் தான் நினைத்தது போல காட்சிகள் அமைய வேண்டும் என்கிற எண்ணத்தில் ஆத்விசேஷ் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிய தகவலோ அவருக்கு பதிலாக இன்னொரு நடிகை நடிக்கிறார் என்கிற தகவலோ இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.