‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாத மத்தியிலேயே ஆரம்பமாகி கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பாதிப்படைந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழையை முன்னிட்டு சில தியேட்டர்களில் நேற்றைய மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி 'அமரன், பிளடி பெக்கர், பிரதர்,' ஆகிய படங்களும், நவம்பர் 14ம் தேதி 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. அந்த சமயங்களில் மழை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அப்படங்களுக்கான ரசிகர்களின் வருகை இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து வர உள்ள படங்கள் அதை சமாளிக்குமா என்ற அச்சமும் தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது.