தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. வரலாற்றுப் புனைவும், அறிவியல் புனைவும் கலந்த படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரியான படங்களை சுமார் மூன்று மணி நேரம் ஓடும் விதத்தில்தான் இயக்குனர்கள் உருவாக்குவார்கள். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான சில பிரம்மாண்ட படங்களையும் அதே மூன்று மணி நேரம் ஓடும் விதமாக வெளியிட்டார்கள். அதன்பின் படம் ரொம்ப நீளம் என்று விமர்சனங்கள் வந்த பிறகு பின்னர் அவற்றைக் குறைத்த சம்பவங்களும் நடந்தது.
அதனால், 'கங்குவா' குழுவினர் அதை மனதில் வைத்து படத்தின் நீளத்தை இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடும் அளவில்தான் 'பைனல்' செய்துள்ளார்களாம். ஆகவே, படம் நீளம் என்று படம் வெளியான பின் யாரும் குறை சொல்ல வாய்ப்பில்லை. வெளியாகி உள்ள இந்தத் தகவல் உண்மையா என்பது படத்தின் தணிக்கை முடிந்த பின் தெரிந்துவிடும்.