'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டன்ட் மூலம் சரி செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் விரைவில் 'கூலி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் மட்டும் வெளியானது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் எப்போது மீண்டும் படப்பிடிப்புக்குப் போவார் என்றும் எதிர்பார்த்து வந்தனர்.
இதனிடையே, அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவரை படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின. ரஜினிகாந்த் அதே பழைய உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 'கூலி' படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி தற்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.