மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 2021ம் வருடம் ஜூலை மாதம் 16ம் தேதி அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து 'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக அந்தப் படம் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் வாங்கி அதனுடன் பழகியும் வந்தார் சூர்யா. 2022ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தக் காளையுடன் அவர் நடந்து சென்ற வீடியோவையும் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. தனக்கு திருப்புமுனை தந்த பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்து முதல் கட்டப் படப்பிடிப்புடன் அவற்றிலிருந்து விலகினார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து பின் அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்றார்கள். அதன்பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க ஆரம்பித்து படத்தையும் முடித்துவிட்டார் சூர்யா.
இப்போது சூர்யாவின் 45வது படமாக ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அப்படி என்றால் 'வாடிவாசல்' படம் மேலும் தள்ளிப் போகும் என்பது சொல்லாமலேயே தெரிந்துவிடும். 'விடுதலை 2' படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார் என்றும் சொன்னார்கள். அப்படம் முடிந்து டிசம்பர் மாதமும் வெளியாகப் போகிறது.
அதற்கடுத்து 'வாடிவாசல்' படத்தை இயக்க வெற்றிமாறன் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பாலாஜி இயக்க உள்ள படத்திற்குப் போகிறார் சூர்யா. அதன் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியாகலாம்.
எப்போது 'வாடிவாசல்' என்று பெயர் வைத்தார்களோ அதன் 'வாசல்' இன்னும் திறக்கப்படாமலேயே வாடிப் போய் உள்ளது.