பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் | மீண்டும் சின்னத்திரைக்கு யூடர்ன் அடித்த அபிராமி வெங்கடாசலம் | அலுவலகத்தில் நகை திருடிய உதவி இயக்குனர் : மன்னித்த பார்த்திபன் | 50 லட்சம் கேட்டு ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் | பிளாஷ்பேக் : படத்தின் வெற்றிக்காக 520 கிலோ மீட்டர் பாதயாத்திரை செய்த இயக்குனர் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவின் முதல் நடன நடிகை | அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் |
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‛இட்லி கடை' என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படங்களிலும் நடித்து வருகிறார்.
கைவசமுள்ள இந்த படங்களை எல்லாம் முடித்ததும் மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்கப் போகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியம் வேடத்திலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தொடரி என்ற படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.