மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே. சூர்யா தற்போது மலையாள மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் உடன் இணைந்து ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என அவரே ஒரு சில நேர்காணலில் தெரிவித்தார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ். ஜே. சூர்யா. அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.