பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

தமிழ் சினிமாவை அமெரிக்கா வரை வசூல் செய்யும் விதத்தில் கொண்டு சென்ற முதல் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்து 2007ல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம்தான் உலக அளவில் பரவலாகத் திரையிடப்பட்டது. அதுவரையில் தமிழ்ப் படங்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தான் திரையிடப்படும். அவற்றோடு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் வெளியானது.
அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் யுஎஸ் டாலர் தொகையை மொத்தமாக வசூலித்தது. மற்ற நாடுகளுடன் சேர்த்து சுமார் 9 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. அந்தப் படத்திற்குப் பிறகே மற்ற நடிகர்களின் படங்களும் இப்படி உலக அளவில் வெளியாக ஆரம்பித்தது.
'சிவாஜி' படத்திற்குப் பிறகு ரஜினி நடித்து வெளிவந்த 5 படங்கள் அமெரிக்காவில் 2 மில்லியன் யுஎஸ் டாலர் தொகையைக் கடந்து வசூலித்துள்ளன. தற்போது 7வது படமாக 'வேட்டையன்' படமும் அப்பட்டியலில் இணைந்துள்ளது. இந்த வசூல் தொகை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.