பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

2024ம் ஆண்டு இன்னும் இரண்டரை மாதங்களில், 11 வாரங்களில் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாக தங்களது படங்களை வெளியிட வேண்டும் என படத்தை முடித்துள்ள பல சிறிய தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். இந்த ஆண்டின் முக்கிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது. அடுத்த மாதம் சூர்யாவின் 'கங்குவா' படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதற்கடுத்து தமிழில் டாப் நடிகர்களின் படங்கள் பல தியேட்டர்களை ஆக்கிரமித்து வெளியாக வாய்ப்பில்லை. எனவே, அடுத்த சில வாரங்களுக்கு நிறைய சிறிய படங்களை எதிர்பார்க்கலாம்.
அது இந்த வாரத்திலேயே ஆரம்பமாகப் போகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை அக்டோபர் 18ம் தேதி “ஆலன், ஆர்யமாலா, கருப்பு பெட்டி, ராக்கெட் டிரைவர், சார்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. சிறிய படங்கள் என்று நாம் சொன்னாலும் அதில் சில படங்கள் தரமாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்து நன்றாகவே வசூலிக்கின்றன. அப்படி எந்தப் படம் இந்த வாரம் வரவேற்பைப் பெறப் போகிறது என்பதற்கு நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.