லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் | மீண்டும் சின்னத்திரைக்கு யூடர்ன் அடித்த அபிராமி வெங்கடாசலம் | அலுவலகத்தில் நகை திருடிய உதவி இயக்குனர் : மன்னித்த பார்த்திபன் | 50 லட்சம் கேட்டு ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் | பிளாஷ்பேக் : படத்தின் வெற்றிக்காக 520 கிலோ மீட்டர் பாதயாத்திரை செய்த இயக்குனர் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித்குமார், அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் வேற லெவல் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைலிசான ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.