'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர் | அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள் | எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் |
2025ம் வருடப் பொங்கலுக்கு 'விடாமுயற்சி, வணங்கான், கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வரவில்லை என நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பொங்கல் வெளியீடு என சிறிய பட்ஜெட்ப டமான 'தருணம்' என்ற படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
'விடாமுயற்சி' படம் திடீரென நேற்று விலகியதை அடுத்து தற்போது சில படங்கள் பொங்கல் வெளியீடாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளன. சிபிராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்', ஷேன் நிகாம், கலையரசன் நடித்துள்ள 'மெட்ராஸ்காரன்' ஆகிய படங்கள் ஜனவரி 10ல் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறார்களாம். இன்னும் ஓரிரு தினங்களில் பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் வரும் என உறுதியாகத் தெரிந்துவிடும்.