எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' |
புத்தாண்டு தினம் உலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டை சிங்கப்பூரில் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் அங்கு உள்ளார். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கார் ரேஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார் அஜித்.
இதேப்போல் தமிழ் சினிமாவின் இன்னொரு நட்சத்திர தம்பதியான விக்னேஷ் சிவன், நயன்தாராவும் தங்களது மகன்களுடன் துபாயில் நடிகர் மாதவன் குடும்பத்தாருடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள். மாதவன் மற்றும் அவரது மனைவியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் போட்டிங் செய்துள்ளார்கள். அது குறித்த ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதேப்போல் புர்ஜ் கலிபா முன் எடுக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட போட்டோவையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.