ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது |
இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாக இருப்பவை தமிழ்ப்படமான 'கங்குவா', தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதியும், 'புஷ்பா 2' படம் டிசம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களையுமே பான் இந்தியா வெளியீடாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியானது. இப்படத்தின் வெளியீடு பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ஒரு வேளை 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என்றால் மகனுக்காக 'விஷ்வம்பாரா' படத்தை சிரஞ்சீவி தள்ளி வைப்பாரா என்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது.