அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் டி.பி.ராஜலட்சுமி. அவர் இயக்கிய முதல் படம் 'மிஸ்.கமலா'. அவர் எழுதிய 'கமவல்லி' என்ற நாவலையே அவர் 'மிஸ்.கமலா' என்ற பெயரில் படமாக இயக்கினார். அவரே தயாரிக்கவும் செய்தார். இயக்கம், இசை எல்லாமே அவர்தான்.
ஒரு பெண்ணின் புரட்சிகர வாழ்க்கையை சொன்ன படம். கமலா என்ற இளம்பெண் கண்ணப்பன் என்ற இளைஞனை காதலிக்கிறார். ஆனால் அவளது காதலை ஏற்க மறுக்கும் பெற்றோர் கமலாவை ஒரு டாக்டருக்கு மணமுடித்து வைத்து விடுகிறார்கள். முதல் இரவிலேயே தான் கண்ணப்பனை காதலித்த விஷயத்தை டாக்டரிடம் சொல்லிவிடுகிறார். நல்ல குணம் கொண்ட அந்த டாக்டர் அவளை தன் காதலுடன் வாழ அனுமதித்து விட்டு அவளிடமிருந்து விலகுகிறார்.
இதை தொடர்ந்து கமலாவை அவரது பெற்றோர்களே ஏற்க மறுக்கிறார்கள். சமுதாயம் அவரை திட்டித் தீர்க்கிறது. வேலைக்கு செல்லலாம் என்றால் யாரும் வேலை தர முன்வரவில்லை. தன் காதலனிடம் சென்று தன்னை திருணம் செய்ய சொல்லும்போது இன்னொருவர் மனைவியை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிடுகிறார்.
இதனால் விரக்தி அடைந்து தற்கொலை செய்ய முயலும் அவரை கணவரான டாக்டர் காப்பாற்றுகிறார். வாழ்க்கையை அவருக்கு புரிய வைக்கிறார். பின்னர் வேலைக்கு சென்று உயர்ந்த நிலையை அடைந்ததும், காதலன் கண்ணப்பன் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார். அப்போது கமலா எடுக்கும் முடிவுதான் படத்தின் ஹைலைட்.
பின்னாளில் வந்த 'அவள் அப்படித்தான்', 'புதுமைப் பெண்' மாதிரியான படங்களுக்கு முன்னோடியாக அமைந்த படம் இது. இதில் கமலாவாக டி.பி.ராஜலட்சுமி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் டி.பி.ராஜலட்சுமி தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர் ஆனார். இந்திய அளவில் முதல் பெண் இயக்குனர் பத்மா பேகம். இவர் 1926ம் ஆண்டு 'புல்புல் ஏ பரிஸ்டான்' என்ற இந்தி படத்தை இயக்கினார். 'மிஸ்.கமலா' 1936ம் ஆண்டு வெளியானது.