தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

பிரபல கல்வி நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஜசரி கணேஷ். தமிழில் கோமாளி, வெந்து தனிந்தது காடு, மூக்குத்தி அம்மன் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். அடுத்து அவரது தயாரிப்பாளர் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளது. இதில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க, சுந்தர் சி இயக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இவர் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார் என கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக இப்போது நடைபெற்ற ஜசரி கணேஷ் பிறந்த நாள் பார்டியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இதன்மூலம் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாவது உறுதியாகி உள்ளது.
தனுஷ் தற்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக உள்ளார். ராயன் படத்திற்கு பின் அவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருவதோடு நடிகராக குபேரா, இளையராஜா வாழ்க்கை படம், தேரே இஸ்க் மெயின் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன.




