காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் விஜய் தனது 69வது படத்தை முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இந்த அரசியல் வருகை குறித்து நவரச நாயகன் கார்த்திக் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனால் தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் என்னை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். காரணம் தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தினால் அது எளிதில் மக்களை போய் சேரும். அதனால் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது கருத்து,'' என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்திக்.