'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் அதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து மீண்டும் 'ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கி அதையும் வெற்றி படமாக கொடுத்தவர். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீப நாட்களாக இதன் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்றது. தற்போது அங்கே படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வந்து இறங்கியுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இது குறித்து பிரித்விராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “குஜராத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு எம்புரான் படப்பிடிப்பிற்காக இடம்பெயர்ந்துள்ளோம். கிட்டத்தட்ட 1400 கிலோ மீட்டர்களை 12 மணி நேரத்தில் கடந்துள்ளோம். அந்த அளவிற்கு வெறிபிடித்த ஒரு குழு” என்று தனது படக்குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு குறித்து கமெண்ட் தெரிவித்துள்ள பிரித்விராஜன் மனைவி சுப்ரியா, “அப்படியே மாற்றுப் பாதையில் திரும்பி கொஞ்சம் வீட்டிற்கும் வந்து செல்லுங்கள் டைரக்டர் சார்” என்று கூறியுள்ளார்.