முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
2022ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான 70வது தேசி திரைப்பட விருதுகளை வென்றவர்களைப் பற்றிய அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக வென்றனர்.
அதில் நடன இயக்குனர் ஜானி, நடனப் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருதை வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
70வது தேசிய விருதுகள் டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. போக்சோவில் கைதாகி விருதைப் பெறுவதற்காகவே இடைக்கால ஜாமீனில் வர உள்ள ஜானி, தேசிய விருதைப் பெறுவது சரியா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய விருதுகள் குழு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பலரும் காத்திருக்கின்றனர்.