'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளி வெளியீடாக அக்., 31ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த படத்திலிருந்து ' ஹேய் மின்னலே" எனும் முதல் பாடலை நாளை அக்டோபர் 4ம் தேதி அன்று ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இது ஜிவி பிரகாஷின் 700வது பாடல் என தெரிவித்துள்ளனர்.