பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் |
மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜாபர் இடுக்கி. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது ஜாபர் இடுக்கி மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி பரிந்துரைப்படி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கேரள அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு இப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் அனுப்பி உள்ளள புகார் மனுவில், ''சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது ஓட்டல் அறையில் வைத்து ஜாபர் இடுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று இருந்தோம். அப்போது நடிகர் பவன் கல்யாண் உள்பட 2 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி ஜாபர் இடுக்கி என்னை கட்டாயப்படுத்தினார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
விதவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.