2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஞானவேல் இயக்கத்தின் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் பத்தாம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அனிருத் இசையமைத்திற்கும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், பஹத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே நடைபெற்ற நிலையில் இன்று வேட்டையன் டிரைலர் வெளியாகிறது. ரஜினி படங்களுக்கு எப்போதுமே ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட போன்ற பல வெளிநாடுகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ரஜினி படம் வெளியாகாத தென் கொரியா நாட்டில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. அந்த வகையில் தென் கொரியாவில் வெளியாகும் ரஜினியின் முதல் படம் மட்டுமின்றி முதல் தமிழ் படமும் இந்த வேட்டையன் தான். அதோடு இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் நிலையில் தென் கொரியாவில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகிறது.