பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி |
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை கிஷோர் பாண்டு ரங் பாலேகர் இயக்கி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமலின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த காந்தி டாக்ஸ் படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதோடு, இன்று முக்கியமான குரல், மூலை முடுக்கெல்லாம் விரைவில் எதிரொலிக்கும் குரல்! அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள். காந்தி டாக்ஸ் விரைவில் என்றும் தெரிவித்துள்ளனர்.